குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ், கூகுளின் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் ஏ.ஓ.எல் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம்.

இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.

இக்குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி, பறவை மின்னஞ்சல் செயலி, குறியீட்டுமுறை மாற்றி, தென்றல் - பெயர்த்தகு செயலி, ஓசை - தமிழ் உரை ஒலி போன்ற கருவிகளும் துணை இணைப்பாக இணைத்து வழங்கப்பட்டுள்ளன.

 
 
இதன் சிறப்பம்சங்கள்:
தமிழை உள்ளீடு செய்ய, வியத்தகு முறையில் வடிவமைக்கப்பட்ட செயலி.
மேம்படுத்தப்பட்ட யுனிகோட் தொழில்நுட்பம்.
யுனிகோட், திஸ்கி, டாப், டாம், லிபி மற்றும் பழைய எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.
உயரிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட தமிழ் ஆங்கில பயனர் இடைமுகம்.
யுனிகோட் தொழில்நுட்பத்துடன் கூடிய கவிதை தமிழ் ஆங்கில சொற்செயலி.
SMTP சார்ந்த பறவை மின்னஞ்சல் செயலி. இப்பொழுது ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் அனுப்பும் வசதி.
மேம்படுத்தப்பட்ட குறியீட்டுமுறை மாற்றி.
தென்றல், ஒரு குறுகத்தரித்த பெயர்த்தகு குறள் செயலி, இதனை எங்கு வேண்டுமானாலும் உங்களோடு எடுத்துச் செல்லலாம்.
ஓசை - தமிழ் உரை ஒலி, தமிழை வாசிக்கும் தொழில்நுட்பம்.
தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகை, தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகை, புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகியவைகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயனர் செயலேடு.
பார்த்து பழக திரைவிசைப்பலகை, இதனைக் கொண்டு மிகச்சுலபமாகத் தமிழில் உள்ளீடு செய்யலாம்.
30 நாள்களுக்கு முழுமையாக இயங்கும் இத்தொகுப்பு, உங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா எனச் சோதித்து பார்த்துக்கொள்ளலாம்.
அச்சோதனை காலத்திற்குப் பின்னும் உரிமம் பெறாவிட்டால் தானாகவே இத்தொகுப்பு இலவச வெளியீடாக மாறிவிடும்.
 
  குறள் செயலியை எப்படி விலைக்குவாங்குவது?
       
  இறக்கம் செய்து நிறுவவும்
 
முதலில் குறள் தமிழ்ச் செயலியை எங்கள் இணைய தளத்தில் இருந்து இறக்கம் செய்து, 30 நாட்களுக்கு முழுமையாக இயங்கும் இத்தொகுப்பை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இறக்கம் என்ற பகுதியை காணவும்.
 
       
  உரிமத்தை விலைக்கு வாங்கவும்
 
குறள் செயலியின் உரிமத்தை விலக்கு வாங்கும் முன் அது உங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றதா என சோதித்து பார்த்துக்கொள்ளவும். குறள் செயலியின் உரிமத்தை எங்கள் இணைய தளத்தில் இருந்து விலைக்கு வாங்கலாம், இது மிகவும் பாதுகாப்பானதே, இப்பகுதியை இத்தொழில் நுட்பத்தில் உலகில் முன்னனி வகிக்கும் PayPal என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகினறது. மேலும் விவரங்களுக்கு விலைக்குவாங்க என்ற பகுதியை காணவும்.
 
       
  குறள் செயலியை பதிவுசெய்யவும்
 
குறள் செயலியின் உரிமத்தை வாங்கிய உடன், பதிவு எண்ணுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எங்கள் இணைய தளத்தில் நீங்களே குறள் செயலிக்கான பதிவு எண்னை உருவாக்கிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இவையாவும் உயரிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்வைகளாகும்.
இப்போது உங்கள் கணினியில் நிருவியிருக்கும் குறள் செயலியை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பதிவுசெய்க என்ற பகுதியை காணவும்.

 
   
Solution Graphics
Home | About KuralSoft | Unicode Help |Contact Us
Copyright © 2006 KuralSoft.com. All rights reserved.